Type Here to Get Search Results !

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய கொரோனா: இந்திய மக்கள் பயப்பட தேவையில்லை - மத்திய சுகாதார துறை அமைச்சர்

 
இங்கிலாந்தில் தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.  


தடுப்பூசி போடத்தொடங்கியதும் இங்கிலாந்தில்  கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது. 


கொரோனா பாதிப்பால் நாடுமுழுவதும் 3 அடுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. 


இதனால் பல ஐரோப்பிய நாடுகள், அந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்து உள்ளன.  


இந்தியாவும்  பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர  நாளை (செவ்வாய்க்கிழமை)  நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதித்து உள்ளது/  


இந்நிலையில், கொரோனா வைரஸின் இந்த புதியவகை வடிவம் குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டு கண்காணிப்புக் குழுவின் (ஜே.எம்.ஜி) அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியான டாக்டர் ரோடெரிகோ எச்.ஓஃப்ரின், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 


கூட்டத்திற்கு ,பின்   பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்`புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாங்கள் நன்கு அறிவோம். மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தான் நான் கூறுவேன்' என கூறினார். 
Source Dinathanthi


Top Post Ad

Below Post Ad