Type Here to Get Search Results !

எது குறை? படித்ததில் பிடித்தது





ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது.

கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது.

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான்.

உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.

அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது.

*நீதி :*
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.


Top Post Ad

Below Post Ad