Type Here to Get Search Results !

உடல் பாகங்களை பயமுறுத்தாதீர்கள்

(1) காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

(2) 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

(3) இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப் பை பயப்படுகிறது.

(4) ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

(5) நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

(6) சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

(7) அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

(8) அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

(9) சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

(10) இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

(11) எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.

உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள்......

இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை.....

கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை....

அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது....

எனவே நம் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.....

Top Post Ad

Below Post Ad