Type Here to Get Search Results !

ரமலான் பண்டிகை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வு தேதிகள் மாற்றம்


ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரமலான் பண்டிகை மே 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மே 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையைக் காண.. இங்கே கிளிக் செய்யவும்.
12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிலையில், பிறை முன்கூட்டியோ அல்லது மறுநாளோ தெரியும் நிலையில், ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால், அன்றைய நாள்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு தேதிகளை மாற்றும்படி மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று, மே 13 மற்றும் 15 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த 10, 12 வகுப்புத் தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சு. வெங்கடசன் அனுப்பியிருந்த கடிதத்தில், ரமலான் பண்டிகை மே-14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பிறையின் அடிப்படையில் மே-13 அல்லது 15-ஆம் தேதியிலும் பண்டிகை அமையலாம்.
ஆனால் இந்த இரு தேதியிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவ, மாணவிகளை அவர்களது முக்கிய பண்டிகை நாளில் தேர்வெழுத வைப்பது சரியாக இருக்காது.
எனவே, ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
Source : Dinamani

Top Post Ad

Below Post Ad