Type Here to Get Search Results !

சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி?


சிக்கன் லாலிபாப்

தேவையான பொருட்கள்

சிக்கன் துண்டுகள் (லெக் பீஸ்) - 6
அரிசி மாவு - 2
கையளவு சோளமாவு - 1
கையளவு உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
வெங்காயம் (விழுது) - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு
சிவப்பு கலர் - 1 குறைந்த அளவு.

செய்முறை

* முதலில் சிக்கன் லாலிபாப் லெக் பீசைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

* அரிசி மாவு, சோளமாவு,உப்பு,சோயாசாஸ்,அஜினோமோட்டோ,முட்டை, வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,கலர் இவையனைத்தையும் கலந்து கூழாக்கிக் கொள்ளவும்.

* சிக்கன் துண்டுகளை இதில் புரட்டி ஊற வைத்து ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

* மிதமான தீயில் வைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு எடுத்தவுடன் அலுமினிய பாயில் கொண்டு ஒரு சுற்று சுற்றி விடுங்கள். சாப்பிடும்பொழுது பேப்பரை பிரித்து சிக்கனை சாப்பிடவும்.மொறுமொறுவென சுவையாக இருக்கும்.இப்போது சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.

Top Post Ad

Below Post Ad