திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2007ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் தலைமையாசிரியர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பள்ளியில் பயின்ற இருபால் மாணவர்களும் தங்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விதமாக நினைவுப் பரிசுகளை வழங்கினர். பள்ளியில் பயின்ற ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகுலுக்கியும் கட்டித் தழுவியும் தங்களது பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.
அனைவரும் பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவில் இருக்கைகள் பீரோ உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, அனைவரும் ஒன்றுகூடி புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.