Type Here to Get Search Results !

அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்புரத்தே பேட்டி

உயர்கல்வி படிப்புகளுக்கு திறனை அறியும் வகையில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அனில் சுகாஸ்புரதே கூறியுள்ளார்.




நீட் தேர்வு போல அனைத்து உயர் கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வுஅனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே அறிவிப்புபுதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதை விடுத்து கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலையை செய்யும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிடும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கும் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதற்குள் மத்திய அரசு அடுத்த ஷாக் கொடுக்க தயாராகிவிட்டது. கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் எனவும் புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.தற்போது கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மாணவர்கள் கடும் பாதிப்பு அடைவார்கள் என மாணவர்களும், கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் விகிதம் குறையும் என கூறப்படுகிறது.

புதிய தகவல்



Top Post Ad

Below Post Ad