Type Here to Get Search Results !

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; அனல் காற்று வீசும் -சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் நேரத்தில் திறந்த வெளியில் பணி செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வரும் 4 ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் தரைக்காற்றால் வெப்பம் மேலும் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பாளர்கள், வாக்காளர்கள், விவசாயிகள், போக்குவரத்து காவலர்கள், மக்கள் திறந்த வெளியில் பணியாற்ற வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad