Type Here to Get Search Results !

செட்டிநாடு சிக்கன் சூப் எப்படிச் செய்வது?




எலும்புடன் கூடிய அரை கிலோ சிக்கனை நன்றாக சுத்தம் செய்துவைக்கவும். ஒரு துண்டு இஞ்சி, சிறிதளவு கொத்தமல்லி, ஐந்து பூண்டு பற்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாய், 50 கிராம் சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ஒன்று, லவங்கம் ஒன்று போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி, கொத்துமல்லி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.


அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் தனியாத்தூள், அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சுத்தம் செய்த கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, ஆறு விசில்கள் வரும் வரை வேக விடவும்.பின்னர் இந்த சிக்கன் சூப்பில் சிறிதளவு கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு பிழிந்தால் சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் ரெடி.

செட்டிநாடு சிக்கன் சூப் சிறப்பு :


சிக்கனில் உள்ள சத்துகள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவும்.


Top Post Ad

Below Post Ad