Type Here to Get Search Results !

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதல்-அமைச்சர் ஸ்டாலின் உறுதி



தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவின் காரணமாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளது. இந்த ஊரடங்கில் தேநீர் கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்துக்கு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், தேவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மீண்டும் முழுஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்றும் தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என  ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட கூறினார்.மேலும் மறுபடியும் ஊரடங்கு என்கிற சூழல் உருவானால் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Top Post Ad

Below Post Ad