நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்,
எஸ்.எம்.ஏ எனப்படும் ஸ்பைனல் மஸ்குவர் அட்ரொபி நோயால் பாதிக்கப்பட்டுள்ள,
2 வயது மகளைக் காப்பாற்ற 22 கோடி ரூபாய் தேவை என்ற நிலையில்,
அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்
குழந்தையின் தந்தை...
*துறுதுறு பார்வை, கள்ளம் கபடமற்ற புன்னகை என வளையவரும் மித்ரா என்ற,
2 வயது குழந்தை ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி எனப்படும் முதுகெலும்பு தசை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
தசைகளை பலவீனப்படுத்தி,
அவற்றின் இயக்கத்தை கடினமாக்கும் இந்த நோயால்,
குழந்தைகளின் மூளையில் உள்ள
செல்கள் மற்றும் அவர்களின் முதுகெலும்பில் உள்ள நரம்புகள் சிதைவடைகின்றன.
இதனால் ஒரு கட்டத்தில் தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் சிக்கனல்களை அனுப்புவதை குழந்தைகளின் மூளை நிறுத்திவிடுகிறது.
இதன் காரணமாக காலப்போக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதுகெலும்பு தசைக் குறைபாடு
அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மற்ற நோய்களைப் போல் இந்த நோய்க்கான மருந்து அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.
அத்தனை
குறைவான விலையும் இல்லை.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ்.எம்.ஏ நோய்க்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாயாகவும்
அதனை இறக்குமதி செய்வதற்கான இதர செலவுகளாக 6 கோடி ரூபாயும் என 22 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
அண்மையில் மும்பையைச் சேர்ந்த 5 மாத குழந்தையான டீராவிற்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால் சிறிய அளவில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் தன்னால் 22 கோடி ரூபாயை ஒற்றை ஆளாகப் திரட்ட முடியாது என்று கூறும் சதீஷ்குமார்,
அதற்காக சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
இதுவரை ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது என்று கூறும் அவர்,
மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் தன்னுடைய மகளைக் காப்பாற்ற முடியும் என்கிறார்.
மகப்பேறு காலத்திலேயே குறிப்பிட்ட பரிசோதனைகள் மூலம் இந்த நோயைக் கண்டறியலாம்
என்று மருத்துவர்கள் கூறியதாகக் கூறும் சதீஷ்குமார்.
குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களுடைய உறவு வட்டத்தில்,
யாருக்கேனும் இவ்வகை நோய் இருந்திருப்பது தெரிந்தால் மருத்துவர்களிடம் தெரிவித்து,
உரிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.