ஆற்காடு அருகே கொரோனா பாதிப்பால் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கலவை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சுந்தரி (57). இவர் திமிரி அல்லாளசேரியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுந்தரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அவருக்கு திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என முடிவு வெளியாகி உள்ளது. இதனையடுத்து, வீட்டில் இருந்து வந்த சுந்தரிக்கு நேற்றிரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் உறவினர்கள் அவரை வாலாஜாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சுந்தரிக்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனையில், வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே சுந்தரி உயிரிழந்தர். கொரோனாவால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் கலவை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post