தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
B.1.1.529 என்ற அடையாள குறியீடு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வைரசுக்கு 'ஓமிக்ரான்' என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இதுவரை வந்த உருமாற்றங்களில் இந்த வைரஸ், அதிக உருமாற்றத் தன்மை உடையதாகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.