தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கேரட் துருவல்கால் கிலோ
சர்க்கரை 1 கப்
பொடித்த ஏலக்காய்6
காய்ச்சிய பால் முக்கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
முந்திரி6
திராட்சை 6
உருக்கிய நெய் அரை கப்
ஆரஞ்சு ரெட்பவுடர் கால் டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். பின் கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
ஆறியவுடன், அதை மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கெட்டியான பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் கேரட் விழுது சேர்த்து, கெட்டியான சுருள் பதம் வரும் வரை நன்கு கிளறிவிடவும். பின்னர; அவற்றுடன் உருக்கிய நெய்யை சேர்த்து கிளறி விடவும்.
இவை அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி மற்றும் ஆரஞ்சு ரெட்பவுடர் சேர்த்துக் கிளறி இறக்கினால், கேரட் அல்வா ரெடி.