Type Here to Get Search Results !

9 வகையான கார வகைகள் Snacks செய்வது எப்படி?


Table of Content(toc)


ஓமப்பொடி முறுக்கு


தேவையான பொருட்கள்

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
ஓமம் - சிறிது
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
பெருங்காயம் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
கடலை எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை

* முதலில் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.

* இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.

* எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும் அல்லது ஒரு துணியில் பிழிந்து அதை எண்ணெய்யில் எடுத்து போடவும்.

* பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.இப்போது சுவையான ஓமப்பொடி முறுக்கு தயார்.
\


மிளகு காராசேவ்..


தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகு – 1/2 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை

மிளகைப் பச்சையாக வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை கலந்து சலித்துக் கொள்ளவும்.

சலிப்பதால் அனைத்துப் பொருட்களும் ஒன்றாக நன்கு கலந்து விடும்.
இதனுடன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக் கொள்ளவும்.
முறுக்கு அச்சில் சிரித்து மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் இரண்டு சுற்றுகள் பொரித்து விடவும்.
2-3 நிமிடங்கள் கழித்து அதை திருப்பி போட்டு வேக விடவும். எண்ணெய் சத்தம் அடங்கும் வரை வேக விடவும்.

சூடு ஆறிய பின்பு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
மிளகிற்குப் பதில் அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி சேர்த்தும் செய்யலாம்.

கை முறுக்கு..


தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 4 கப்
உளுத்தம் மாவு – 1/2 கப்
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணை / நெய் – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை..

உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும்.

ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
சுவையான கை முறுக்கு தயார்.

ரிப்பன் பக்கோடா..


தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – 1 /4 கப்
வெண்ணெய் (unsalted preferred) – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 -2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப)
எள்ளு – 1 /2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இதனுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் எள்ளு மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

முறுக்கு அச்சில் உள்ள ரிப்பன் பக்கோடா அச்சைப் பயன்படுத்தி எண்ணெயில் பாத்திரம் பிடிக்கும் அளவுக்கு பிழிந்து விடவும்.
பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சூடு ஆரிய பின்பு கற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு.
நிறைய பக்கோடா செய்ய விரும்புபவர்கள், முதலில் மாவு மட்டும் தூள்களை மட்டும் கலந்து வைத்துக் கொள்ளவும். பொரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் போதுமானது.
பொரிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே மாவை பிசைந்து வைத்தால்  நிறம் மாறுவதுடன், அதன் மொறு மொறுப்பும் குறைந்து விடும்.

தட்டை..


தேவையான பொருட்கள்

அரிசிமாவு(லேசாக சூடு செய்தது) – 3 கப்
உளுந்துமாவு – 1 /4 கப்
வெண்ணெய் – 25 கிராம்
கடலைபருப்பு (ஊற வைத்தது) – 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை – 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 1 /2 மேசைக்கரண்டி
பெருங்கயத்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை..

எண்ணெய் தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு பாலிதீன் பேப்பர் எடுத்து மேலே எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
ஒரு உருண்டை எடுத்து பேப்பர் மேலே வைத்து, மெல்லியதாக வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும்.

போர்க் வைத்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அழுத்திக் கொள்ளவும். ( இல்லையெனில் எண்ணெயில் பொரிக்கும் பொழுது உப்பி வந்து விடும். மொறு மொறுவென்று இருக்காது).

தட்டி வைத்திருக்கும் தட்டையை , சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.


பொட்டுக்கடலை முறுக்கு..


தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 4 கப்
பொட்டுகடலைமாவு – 1 1/2கப்
மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
வெள்ளை எள் – 1 / 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

பொட்டுகடலையை மாவாக அரைத்துக் கொள்ளவும்.
வெண்ணையை உருக்கி கொள்ளவும்.
அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, மிளகாய்தூள், சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் அனைத்தையும்
ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

உளுத்தம்பருப்பு முறுக்கு..


தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 4 கப்
உளுத்தம்பருப்பு – 1 கப்
மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
வெள்ளை எள் – 1 / 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

உளுத்தம்பருப்பை லேசாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின்பு அரைத்துக் கொள்ளவும்.
வெண்ணையை உருக்கி கொள்ளவும்.

அரிசி மாவு, உளுத்தம்பருப்பு மாவு, மிளகாய்தூள், சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் அனைத்தையும்
ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு
காரம் வேண்டாதவர்கள் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டாம்.

சீப்பு சீடை


தேவையான பொருட்கள் :

உளுத்தம் மாவு1/2 கப் 
அரிசி மாவு1/2 கப் 
கடலை மாவு1/2 கப் 
தேங்காய் பால்1/2 கப் 
வெண்ணெய்  2 டீஸ்பூன் 
உப்பு   தேவையான அளவு 
எண்ணெய்  தேவையான அளவு ..

செய்முறை :

  சீப்பு சீடை செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். 

  பிறகு அதில் தேங்காய் பாலை லேசாக சு டேற்றி பிசைந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசையவும். பிறகு முறுக்கு அச்சில் தட்டையாக இருக்கும் சீப்பு அச்சில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழியவும்.

  பிறகு கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, அதனை உருட்டிக் கொள்ளவும்.

  பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், உருட்டி வைத்துள்ள மாவைப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சீப்பு சீடை ரெடி.

தேங்காய் பால் முறுக்கு..


தேவையான பொருள்கள்:

அரிசி மாவு - 1 கப்
தேங்காய்ப்பால் - 1/4 கப்
கடலைமாவு - 3/4 கப்
சீரகம் - 4 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை ..

அரிசிமாவுடன், கடலைமாவு, தேங்காய்ப்பால், உப்பு, சீரகம், வெண்ணெய்  எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவில் சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பிழிந்து நன்றாக வேகவிட்டு எடுங்கள். எளிமையான தேங்காய்ப்பால் முறுக்கு ரெடி.

10) பட்டர் முறுக்கு..

தேவையான பொருட்கள்:  

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
வெள்ளை எள்  - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை விளக்கம் :

   ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு கடலைமாவையும், அரிசிமாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

" ஸ்டார்" வடிவ துளையிட்ட அச்சில்  மாவைப் போட்டு, காயும் எண்ணெய்யில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும். "கரகர" வென கரையும் பட்டர் முறுக்கு ரெடி.இதை செய்வதும் மிக எளிது.

Top Post Ad

Below Post Ad