Type Here to Get Search Results !

தைராய்டு, எடை இழப்பு மற்றும் இதயநோய்க்கு மருந்தாகும் தேங்காய்





தேங்காய் சாப்பிடுவதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி 10 குறிப்புகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


தேங்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது.தேங்காய் சுலபமாக கிடைக்கும் அற்புதமான உணவு. தினமும் தேங்காய் நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும். தேங்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது சமைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியமான இந்த காய், கனியின் அற்புத பலன்களையும் கொண்டது.


பச்சை தேங்காய் அதாவது இளநீர், காய்ந்த தேங்காயில் இருக்கும் நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நம்மை தருகிறது. தேங்காயில் இலேசான இனிப்பு சுவை காணப்படும். தேங்காய் சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றாலும், குறிப்பாக பெண்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறுகிறார்கள்.

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்.

1. தைராய்டு, எடை இழப்பு, இதய நோய் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

2. தேங்காய் உட்கொண்டால், இதய நோய்களைத் தவிர்க்கலாம். மேலும், கர்ப்ப காலத்திலும் இதை உட்கொள்ளலாம். உலர் தேங்காய் பெண்களில் யுடிஐ பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

3. தைராய்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக விளங்கும் தேங்காய், தைராய்டு அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி அதை சரிப்படுத்துகிறது. சரியாக சாப்பிடாதது, மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக பலருக்கு இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனைகள் உருவாகின்றன. எனவே, தேங்காய் தைராய்டு பிரச்சனையை போக்கும் சிறந்த உணவு என்று கருதப்படுகிறது.

4. உலர்ந்த தேங்காய்த் துண்டை வெறுமனே மென்று சாப்பிடலாம். தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையானது. சாப்பிடுவதற்கு சுவையான இந்த காய், மனச்சோர்வையும் விரட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

5. தேங்காயை பச்சையாக சட்னி செய்து சாப்பிட்டாலும் சரி, அரைத்து குழம்பு வைத்து சாப்பிட்டாலும் சரி, அது தனது நன்மை தரும் பண்பை மாற்றிக் கொள்வதில்லை.

6. அதேபோல, இளநீர் குடிப்பதும் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். இளநீரில் உள்ள நீர் அருமையான பானமாக மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுகிறது.

7. இளநீரைக் குடித்தபிறகு, அதில் உள்ள வழுவலை (நீரை குடித்த பிறகு உள்ளே இருக்கும் மெலிதான தேங்காய் படிமம்) சாப்பிடுவது, தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையைக் கொடுக்கும்.

 

8. உலர்ந்த தேங்காயை உட்கொள்வது பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அதன் நுகர்வு மார்பகங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனுடன், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

9. தேங்காயை கீற்று போட்டு சாப்பிடுவது பலருக்கும் பழக்கமான ஒன்றாக இருக்கும். தேங்காயில் உள்ள நார்ச்சத்து, மிகவும் உயர்தரமான நார்ச்சத்து என்பது நினைவில் கொள்ளத்தக்கது.,

10 தேங்காய் உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்று தவிர்க்கப்படும். இது பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் யுடிஐ போன்ற தீவிர தொற்றுகளையும் தடுக்கலாம். ஆனால், ஆரோக்கிய குறைவு ஏதேனும் ஏற்படும்போது மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது மிகவும் அவசியமானது.


Top Post Ad

Below Post Ad