செப்டம்பர் 8, வியாழன் அன்று, சந்திரன் மகரம் மற்றும் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். அத்தகைய சூழ்நிலையில், இன்று மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இன்றைய தினம் எந்தெந்த ராசியினருக்கு நன்மையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கு இன்று வாழ்க்கையில் சில கஷ்டங்கள் ஏற்படலாம். அனுபவம் வாய்ந்த நபரின் உதவியுடன், பாதையும் எளிதாக்கிவிடும். அரசுப் பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். வீண் பேச்சை விடுத்து உங்கள் வேலையில் மும்முரமாக இருங்கள். வியாபாரத்தில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். திருமண உறவுகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Happy Onam 2022: ஓணம் வாழ்த்து செய்திகள், புகைப்படங்கள்...
ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்கும். இந்த நேரத்தில் முதலீடு போன்ற நிதி நடவடிக்கைகளில் பிஸியாக இருப்பீர்கள். சில விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் சில கவனக்குறைவு பிரச்சனைகள் வரலாம். அரட்டை போன்ற விஷயங்களில் தங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீங்கள் செய்ய விரும்பாத சில வேலைகளை இன்று செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் சரியான பங்களிப்பு இருக்கும். வீடு மற்றும் வியாபாரத்தில் நல்ல இணக்கம் இருக்கும்.
Happy Onam : ஓணம் பண்டிகை எப்போது? - புராண காதை இதோ
மிதுனம்:
இன்று மிதுன ராசியினர் எதையும் கவனமாகச் செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். சிக்கலான காரியங்கள் நண்பரின் உதவியால் தீர்க்கப்படும். மனதளவில் மேலும் நிம்மதியாக உணர்வீர்கள். நாளின் தொடக்கத்தில் சில பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படலாம். இதுவும் உறவுகளை சீர்குலைக்கும்.
மிகவும் இயல்பானதாகவும் எளிதாகவும் இருக்க வேண்டிய எந்த ஒரு பணியும் மிகவும் கடினமானதாக மாறிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், எனவே கவனக்குறைவாக இருக்க வேண்டாம். வணிகத் துறையில் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆதரவளிப்பார்கள்.
திருப்பதி பிரம்மோற்சவம் 2022 : அனைத்து தரிசங்களும் ரத்து - இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை
கடகம் இன்றைய ராசிபலன் - Cancer
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.
கல்வியில் மேல் நிலையை அடைவீர்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கும் ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரயாணங்கள் வெற்றி கிடைக்கும் என்பதால் மன தைரியத்துடன் மேற்கொள்ளலாம்.
வார ராசிபலன் 5 முதல் செப்டம்பர் 11 வரை - அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
சிம்மம் இன்றைய ராசிபலன் - Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும். எதிர்பாராத தனவரவு உண்டாகும் பிற்பகலில் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் நாளாக இன்றைய நாள் அமையும்.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வது பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நன்மை அடைவீர்கள்.
வக்ர நிவர்த்தி அடையும் சனி: ஜனவரி மாதம் வரை கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்
கன்னி இன்றைய ராசிபலன் - Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் அலைச்சல் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அடிக்கடி உணர்ச்சிவசப்பட நேரிடும் என்பதால் சற்று நிதானத்தை கைக்கொள்ளும். மற்றபடி கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று கவனம் தேவை. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள்.
8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் சாதிக்க இதோ வழி? - 8 தவிர்க்க வேண்டிய எண்ணா? எண் கணித விளக்கம்
துலாம் இன்றைய ராசிபலன் - Libra
காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைக்கான தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தைப் பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.
தோனி போல எண் 7ல் பிறந்தவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் : எண் கணிதம்
விருச்சிகம் இன்றைய ராசிபலன் - Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நாளில் முற்பகுதியில் சற்று அலைச்சல்கள் காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகளும் அலைச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இவர்களில் சற்று நிதானமாக இருக்கவும்.
குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் அனுசரித்துச் செல்லவேண்டும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்று மன உளைச்சலைக் கொடுக்கும். என்றாலும் திறம்பட சமாளிப்பீர்கள் புதிய தொழில் வாய்ப்புகள் ஓரிரு நாட்கள் தாமதமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? எப்படி வழிபட்டால் நல்ல பலன் பெறலாம்
தனுசு இன்றைய ராசிபலன் - Sagittarius
வீடு கட்டுவது அல்லது சொத்துக்கள் வாங்குவது போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை பெரிதாக ஆட்கொள்ளும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். குடும்பத்தை பிரிந்து இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் .
மகரம் இன்றைய ராசிபலன் - Capricorn
அன்பர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கலைத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய சாதனைகளையும் செய்வார்கள்.
வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான திட்டமிடுதல் நோக்கிக் கொண்டு செல்லும்.
கும்பம் இன்றைய ராசிபலன் - Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மான சூழ்நிலையை காண்பார்கள். ஆரம்பக் கல்வியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சற்று கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்லவேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய குடும்பங்கள் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறப் பெறுவார்கள்.
மீனம் இன்றைய ராசிபலன் - Pisces
அன்பர்களே சிறந்த நாளாகும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வீர்கள்.
குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் என்று ஒன்று திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். காலையில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் பிற்பகலில் ஓய்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரு சில பற்றாக்குறைகள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.