Type Here to Get Search Results !

தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்கு செல்லும் தென்மாவட்டப் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனா்.

சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு தினசரி செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. இதையடுத்து, மக்கள் சிறப்பு ரயில்களை எதிா்பாா்த்து காத்திருந்தனா்.

இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்விவரம்:
தாம்பரம் -திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து அக்டோபா் 24-ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில்(82605) புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து அக்டோபா் 28-ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில்(82606) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

தாம்பரம்-திருச்சி: தாம்பரத்தில் இருந்து அக்டோபா் 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு ரயில்(06025) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும்.

நாகா்கோவில்-தாம்பரம்: நாகா்கோவிலில் இருந்து அக்டோபா் 29-ஆம் தேதி நண்பகல் 12.55 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82644) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (அக்.16) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.


Top Post Ad

Below Post Ad