Type Here to Get Search Results !

கரோனா வைரஸ்: தெரிந்த பொய்களும் தெரியாத உண்மைகளும்



மக்களை கவலையடையச் செய்யும் எந்த விஷயத்திலும், அவர்களுக்கு பொய்யான தகவல்களையும் தவறான தீர்வுகளையும் அளிப்பதற்கு சமூக ஊடகங்களில் அவசர அவசரமாகப் பலர் களமிறங்கிவிடுவார்கள். சாதாரண விவகாரங்களுக்கே இப்படியென்றால், இன்று உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் என்றால் சும்மா விடுவார்களா அவர்கள்? 'வெப்பமான நாடுகளில் கரோனா வைரஸ் பரவாது' என்பதில் தொடங்கி, 'சாதராணமாகவே உணவில் இஞ்சி பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளும் இந்தியர்களை கரோனா வைரஸ் தொற்றாது' என்பது வரை பலவிதமான ஊகங்கள் உண்மைத் தகவல்களாக திரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் சில இந்திய உணவுப் பழக்கங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடுமென்றாலும் இன்று உலகை உலுக்கிவரும் 'என்}கரோனா' வைரûஸ அழித்துவிடும் என்று கூறிவிட முடியாது. இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதுமே இதுபோன்ற தவறான, பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சர்வதேச அளவில் கரோனா வைரஸôல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்த நிலையில், இதுபோன்ற பொய்யான தகவல்கள், தவறான வழிகாட்டுதல்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஐ.நா.வின் சர்வதேச சுகாதார அமைப்பு இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, சாமானியர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட பொய்களையும் அவர்களில் ஏராளமானவர்களுக்குத் தெரியாத உண்மைகளையும் அந்த அமைப்பு தனது வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது. 

1. 
பொய்:  
வெப்பமான பகுதிகளில் கரோனா வைரஸ் பரவாது. 

உண்மை:  
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, கரோனா வைரஸ் எல்லாவிதமான தட்பவெப்ப நிலைகளைக் கொண்ட பகுதிகளிலும் தாராளமாகப் பரவும். எனவே வெப்பப் பிரதேசங்களில் வசிப்பவர்களோ, அந்தப் பகுதிகளுக்குச் செல்பவர்களோ அசட்டையாக இருந்துவிட வேண்டாம். 

2. 

பொய்:
 அதிக உஷ்ணமான நீரில் குளித்தால் கரோனா வைரஸ் காணாமல் போய்விடும். 

உண்மை:
 எவ்வளவு வெப்பமான நீரில் குளித்தாலும், உங்களது உடல் உள் வெப்பம் 36.5 டிகிரி முதல் 37 டிகிரி வரைதான் இருக்கும். அதனால் கரோனா வைரஸெல்லாம் சாகாது. அதிக சூட்டினால் உங்கள் தோல்தான் வெந்துபோகும். 

3. 

பொய் :

'டிரையர்'களைக் கொண்டு வெப்பக் காற்றை சுவாசித்தால் கரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும். 

உண்மை :
டிரையர்களை மூக்கில் வைத்துப் பயன்படுத்துவது கரோனா வைரஸ் தொற்றுக்குத் தீர்வு கிடையாது. வேண்டுமானால், கைகளை கிருமிநாசினிகளால் கழுவிய பிறகு, அந்தக் கைகளை காய வைக்க டிரையர்களைப் பயன்படுத்தலாம். 

4. 

பொய் :

பூண்டு சாப்​பிட்​டால் கரோனா வைரஸ் அண்​டாது. 

உண்மை :

பூண்டு என்பது ஆரோக்கியமான உணவுதான். அதற்கு கிருமிகளை அழிக்கும் தன்மை இருக்கக்கூடும். ஆனால், அதனை சாப்பிட்டு யாரும் கரோனா வைரஸிலிடமிருந்து தப்ப முடியாது. 

இப்படி பல பொய்களுக்கு உலக சுகாதார மையம் விளக்கமளித்திருக்கிறது. எனவே, வதந்திகளையும் பொய்களையும் நம்பி அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பாக இருப்போம்.

Source: Dinamalar

Top Post Ad

Below Post Ad