Type Here to Get Search Results !

சிவ பூஜையில் கரடி என்றால்?



பூஜை மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்யும் பொழுது இடையூகளோ அல்லது யாரேனும் வந்து விட்டாலோ அப்பொழுது சொல்கிற ஒரு பழமொழி சிவ பூஜையில் கரடி மாதிரி என சொல்வோம்

அதன் அர்த்தம்.

முற்காலத்தில் ராஜ்யத்தை ஆளும் மன்னன் என்றாலும் அந்த ராஜ்யத்தை தந்த மன்னாதி மன்னன் சிவபெருமான். மக்களுக்கு செய்கின்ற நற்செயல் எல்லாம் மகேசனுக்கு செய்வதே என நன்கு உணந்தவர்கள் ஆதலால், அவர்கள் சிவ பூஜை செய்து ஈசனை வழி பட்ட பின்னரே அரியணையில் ஏறுவார்கள் அப்படி சிவ பூஜை செய்யும் பொழுது ஏதேனும் தடங்களோ இடையூறோ ஏற்படாமல் இருக்க. அக்காலத்தில் கரடி வாத்தியம் வாசிக்க செய்வார்கள்.

பின்பு சிவ பூஜையில் ஈடுபடுவார்கள் இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்திய மாகும் ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

இன்றளவும் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் சிவ பூஜையில் கரடி போல மக்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மன்னனும் மாறிவிட்டான் சிவ பூஜையும் மறந்து போய் விட்டது கரடி வாத்தியமும் மறைந்தே போய்விட்டது.

மக்களும் நாகரீகமென மாறிவிட்டார்கள் ஆனால் எப்பவும் மாறாதவன் மகேசன் மட்டும் தான்.

அன்று மன்னன் உள்பட அனைவருக்குமே ஈசன் மீது மிகுந்த பற்று இருந்தது மக்கள் சொல்வதை அரசன் கேட்டான் அரசன் சொல்வதை ஈசன் கேட்டான்.

மக்களே நீங்கள் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் நிம்மதியாகவும் வாழ சிவ பூஜையே சிறந்த வழி மகேசன் மனம் மகிழ்ந்தால், மக்களின் வாழ்வில் சர்வ நிச்சயமாக ஒளி பிறக்கும் நாம் சொல்வதை அரசன் கேட்கிறானோ இல்லையோ நிச்சயம் மகேசன் கேட்பான்!

Top Post Ad

Below Post Ad