தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட செய்தியில்,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி, வணிக வரித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், வணிக வரித்துறை ஆணையராக இருந்த சித்திக், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.