Type Here to Get Search Results !

சீத்தாப்பழம் - மருத்துவ குணங்கள்.



ஆரோக்கியத்திற்கு அடித்தளம் நாம் உண்ணும் உணவு என்றாலும், இயற்கையாக விளையும் பொருட்களை சமைக்காமல் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


அந்த வகையில் இயற்கையின் வரத்தை நமக்கு குறையாமல் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுபவை பழங்கள். பல்வேறு பழங்களை சாப்பிட்டாலும், சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேலும் மேம்படும்.

அதிலும், சர்க்கரை நோய் இருப்பவர்கள் மற்றும் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களும் சாப்பிடக்கூடிய பழம் சீத்தாப்பழம் என்பது இப்பழத்தின் சிறப்பு.

தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்ட சீத்தாப்பழத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவகுணங்களை கொண்டவை. சீத்தாப்பழத்தில் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே இருப்பதால், இதை சாப்பிட்ட உடனே உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.


மேலும் இந்தப் பழத்தில், வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என பலவிதமான சத்துக்களைக் கொண்டிருக்கிறது.

ஆன்டிஆக்ஸிடென்ட் உருவாவதற்கும் சீத்தாப்பழம் உதவுகிறது. விட்டமின் சி சீத்தாப்பழத்தில் நிறைந்துள்ளது. எனவே, இதை சாப்பிட்டால், தினசை நமக்கு தேவையான வைட்டமின் சி போதுமான அளவு கிடைத்துவிடும்.

உணவுக்கு பிறகு சாப்பிடுவதற்கு ஏற்றப்பழங்களில் முக்கியமானது சீத்தாப்பழம். கொழுப்பை உடலில் அதிகரிக்காத இந்தப் பழம், சர்க்கரையும் ஏறிவிடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கும் உகந்த இனிப்பான பழம் ஆகும்.


இரவு உணவுக்கு பிறகு சீத்தாப்பழம் சாப்பிட்டால், ஆழ்ந்த உறக்கம் வரும். மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் கொண்ட கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் சீத்தாப்பழத்தில் உள்ளதே இதற்குக் காரணம். அதுமட்டுமன்றி, சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்ட்டால் சருமத்தில் ஏற்படும் பளபளப்பைக் (Frutis for Beauty) கண்கூடாகக் காணலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு பொட்டாசியம் சத்து அவசியமானது. அவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டால், இதில் உள்ள பெட்டாசியம் சத்து உடல் ஆரோக்கியத்தை காக்கும் என்பது இந்தப்பழத்தின் மிகவும் முக்கியமான சிறப்பாகும்.



Top Post Ad

Below Post Ad